முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி இன்று மீண்டும் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆய்வு மேற்கொள்கிறார்.

பலத்த சேதம்

தமிழகத்தில் கடந்த 15-ம் தேதி இரவு கஜா புயலின் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்தன. முன்னதாக புயல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் புயல் பாதிப்புபகுதிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நிதியுதவி...

இதை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை மச்சுவாடி மாப்பிள்ளையார் குப்பம் மற்றும் பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் ஆகிய இடங்களில் சேதமடைந்த மின்கம்பங்களைச் சீரமைக்கவும் விழுந்து விட்ட தென்னை மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை அகற்றவும் உத்தரவிட்டார். புயலின் போது உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கினார். பின்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மீண்டும் ஆய்வு

புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முழுமையாக பார்வையிட திட்டமிட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோசமான வானிலை காரணமாக சென்னை திரும்பினார். இதைதொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் மூலம் முதல்வர் பயணம் மேற்கொண்டார். இன்று காலை 8 மணிக்கு கார் மூலம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வில் மூத்த அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து