முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளி

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலையில் கேரள அரசு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கட்டுப்பாடுகள்

சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கேரளாவில் தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சபரிமலை நடை திறந்தபோது இந்து அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அதன் பின்னர் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

காங். முழக்கம்

இந்நிலையில் கேரள சட்டசபை காலை வழக்கம்போல் கூடியது. இந்த கூட்டத் தொடரில் சபரிமலை விவகாரம் எதிரொலித்தது. அப்போது சபரிமலை விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் ஏந்தியிருந்தனர்.

கூச்சல், குழப்பம்

வெள்ள பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் பினராய் விஜயன் பேசினார். அவரை பேச விடாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டு இடையூறு செய்தனர். அவர்களை இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கே வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால், ஐயப்ப பக்தர்கள் அணியும் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜும், கருப்பு உடை அணிந்து வந்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து