முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. யில் மதியம் 12 மணி வரை 22 சதவீத வாக்குகள் பதிவு

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்கு பதிவு நடந்துள்ளது.

மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 3 தொகுதிகளில் மட்டும்  காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

2 அதிகாரிகள் உயிரிழப்பு

இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி வி.எல். காந்தாராவ் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் புகார்கள் வந்த நிலையில், 70 வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சீட்டு தணிக்கை செய்யும் இயந்திரங்கள் மாற்றப்பட்டு வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த வாக்கு பதிவில் பணியில் இருந்த 2 அதிகாரிகள் மாரடைப்பினால் உயிரிழந்தனர்.  அவர்களில் ஒருவர் குணா மற்றும் மற்றொருவர் இந்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.  அவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து