முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் காப்பக வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா, பீகாரில் காப்பகங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ.க்கு மாற்றியது.

சி.பி.ஐ.-க்கு மாற்றம்

பீகார் மாநிலம் முசாப்பர்பூரில் அரசு உதவிப் பெறும் பெண் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல், போதைப்பொருள் உட்செலுத்துதல் போன்ற கொடூரமான துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டது வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. வழக்கு விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் செயல்பட்டுவரும் காப்பகங்களில் சிறுமிகள் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லைக்கு உள்ளானது தொடர்பான 16 வழக்குகளை சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றியுள்ளது.

மனு தள்ளுபடி

பீகாரில் மாநில குழந்தைகள் காப்பக வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றக் கூடாது என்று அம்மாநில அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. முசாப்பர்பூர் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.யிடம் விசாரணையின் நிலையறிக்கையை ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, காப்பக வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளை எங்களுடைய அனுமதியின்று இடமாற்றம் செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

மனித தன்மையற்ற செயல்

காப்பகங்களில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பீகார் மாநில போலீஸ் வழக்குப்பதிவு செய்தபோது கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யவில்லை என்பதை கண்டுபிடித்த சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கடிந்துக் கொண்டது. இந்திய தண்டனை சட்டத்தின் கடுமையான பிரிவுகளை இணைக்காதது மிகவும் வெட்கக்கரமானது, மனித தன்மையற்ற செயலாகும் என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து