முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 2.75 லட்சம் பேருக்கு மானியம்

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

ரூ. 2 லட்சம் நிதியுதவி

பிரதமரின்  அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடனுடன் இணைந்த மானிய திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் என 3 பிரிவுகளாக வீடுகள் கட்ட உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா கூறுகையில்,

12 ஆயிரம் தமிழர்களுக்கு மானியம்

பிரதம மந்திரியின் திட்டத்தின்கீழ் நகர்ப்புறத்தில் அதிக அளவு பயனாளிகள் பயன் பெற்றது குஜராத் மாநிலம் ஆகும். அங்கு 88 ஆயிரம் பேர் மானியம் பெற்று உள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரம் பேரும் மானியம் பெற்று இருக்கிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மானியம் பெற்று உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 12 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 25 லட்சம் வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து