முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வளர்ச்சி திருப்தி அளிக்கவில்லை: பிரணாப் பேச்சு

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பொருளாதார வளர்ச்சி திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் சர்வதேச பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்தியில்லை

சர்வதேச பொருளாதார சக்தியாக மாறக்கூடிய திறன் படைத்தது, இந்தியா. இந்திய பொருளாதாரம் தற்போது 2.27 லட்சம் கோடி டாலர் மதிப்புடையதாக (ஒரு டாலர் மதிப்பு ரூ.70.62) இருக்கிறது. இது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. 5 லட்சம் கோடி டாலரில் இருந்து 6 லட்சம் கோடி டாலர் வரை அது இருந்திருக்க வேண்டும். முன்னாள் நிதி மந்திரி என்ற முறையில், இதை சொல்கிறேன். நாம் இன்னும் நிறைய முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து