முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்புவாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. தலைமையில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம்

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரததில் மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம்  வக்புவாரிய தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான அன்வர்ராஜா தலைமையில் நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக மாவட்டத்தில் 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் நிதியாண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம் குழுவின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்புவாரியத் தலைவருமான அ.அன்வர்ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குழுவின் செயலாளருமம் மாவட்ட கலெக்டருமான கொ.வீர ராகவ ராவ் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் (தொண்டு நிறுவனங்களுக்கான பிரதிநிதி) கே.சி.ஆனிமுத்து,;, (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான பிரதிநிதி) எம்.எஸ்.நிறைகுளத்தான் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2017-2018  மற்றும் 2018-2019 ஆம் நிதியாண்டில் இதுநாள் வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், பாரதப் பிரதமர்  குடியிருப்புத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்,  பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு  திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகியவை குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆய்வு செய்தார்.
 குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் நிதியாண்டில் ரூ.73.71 கோடி மதிப்பில் 16,884 வளர்ச்சித் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு அவற்றில் 9,923 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மீதமுள்ள 6,961 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  இதன் மூலம் 51.560 லட்சம் மனிதசக்தி நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதேபோல 2018-2019ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.52.21 கோடி மதிப்பில் 10,695 பணிகள் துவங்கப்பட்டு இதுவரை 2,308 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  இதன்மூலம் தற்போது வரை 33.54 லட்சம் மனிதசக்தி நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.119.62 கோடி மதிப்பில் 229.826 கி.மீ நீள அளவிலான 63 சாலைப்பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன.  அதேபோல தூய்மைப் பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 2017-2018ஆம் நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் 48,441 தனிநபர்  இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 அதேபோல, முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் நிதியாண்டில் 507 பயனாளிகளுக்கும், 2018-2019 ம் நிதியாண்டில் இதுவரை 497 பயனாளிகளுக்கும் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  இதுதவிர தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2017-2018ஆம் ஆண்டில் ரூ.18.53 கோடி மதிப்பில் 24 சாலைப் பணிகளுக்கும், 2018-2019ஆம் நிதியாண்டில் ரூ.16 கோடி மதிப்பில் 51 சாலைப்பணிகளுக்கும் நிர்வாக  அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், குழுவின் தலைவர்; அ.அன்வர்ராஜா எம்.பி., பேசுகையில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.  காவிரி கூட்டுக்குடிநீர்; விநியோகிக்கும் குழாய்களை சேதப்படுத்துதல், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து சட்டவிதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  அதேபோல பல்வேறு திட்டங்களின் கீழ் தற்போது முன்னேற்றத்தில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து  கூடுதல் கவனம் செலுத்தி, பணிகளை குறிப்பிட்டுள்ள நாட்களுக்கு முன்பாகவே நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் எனவும்  அறிவுரை வழங்கினார்.
 இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சிவராணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கோ.குருநாதன், இணை இயக்குநர்கள் (வேளாண்மை) ஆர்.ஆர்.சுசீலா, (மருத்துவ பணிகள்) மரு.முல்லைக்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் (காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்) மாரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து