முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது குறித்து மதுரை ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை-மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகள், கட்டண கழிப்பறைகள் உள்ளிட்ட கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும்  பராமரிக்குமாறு ஏற்கனவே ஆணையாளர்   அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது குறித்து மண்டலம் எண்.2 வார்டு எண்.36 ஆழ்வார்புரத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திலும், ஆழ்வார்புரம் வைகை வடகரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திலும், மண்டலம் எண்.1 ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகளிலும், பெண்களுக்கான சிறப்பு கழிப்பறையிலும், சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்றும், தண்ணீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் முறையாக உள்ளதா என்றும்  ஆணையாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கழிப்பறைகளை நாள் ஒன்றுக்கு மூன்று முறை சுத்தம் செய்யுமாறும், கழிப்பறைகளில் உள்ள கறைகளை ஆசிட் கொண்டு சுத்தம் செய்யுமாறும் உத்தரவிட்டார். மேலும் கழிப்பறைகளில் வர்ணம் பூசுமாறும், உடைந்துள்ள டைல்ஸ் கற்களை உடனடியாக மாற்றுமாறும் கூறினார். சுத்தமாக பராமரிக்காத கழிப்பறைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். கழிப்பறையில் கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என அங்கு வரும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். கழிப்பறைகளில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார ஆய்வாளர்கள் கட்டண விபரம் குறித்த தகவல் பலகை உள்ளதா என ஆய்வு செய்யுமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அனுமதி அளவை விட கூடுதலாக நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 5 கடைகளுக்கு ரூ.6000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். 
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் திரு.பழனிச்சாமி,  .முருகேசபாண்டியன், செயற்பொறியாளர்  .ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல்,  சுகாதார அலுவலர்  .சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்  .அலாவுதீன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து