முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணி 358 ரன்னுக்கு ஆல் அவுட்! 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர்

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, 358 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பிரித்வி ஷா, கோலி, புஜாரா, விஹாரி, ரகானே அரைசதம் எடுத்தனர்.

டி-20 தொடர் சமன்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6-ம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

ஒரே ஒரு பயிற்சி...

இதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.

பிருத்வி 66 ரன்...

தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் பிருத்வி ஷாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். தொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா அதிரடியாக ஆடினார். ஆனால், டி20 தொடரில் சொதப்பிய கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் 3 ரன்னில் வெளியேறி, ஏமாற்றினார். இதையடுத்து புஜாரா வந்தார். பிருத்வி ஷாவும் புஜாராவும் அடித்து ஆடினார். சிறப்பாக ஆடி கொண்டிருந்த பிருத்வி 11 பவுண்டரிகளுடன் 69 பந்துகளில் 66 ரன் எடுத்த நிலையில் பாலின்ஸ் பந்தில் போல்டானார்.

புஜாரா 54 ரன்...

இதையடுத்து கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். மதிய உணவு இடைவேளை வரை, 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 169 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் 54 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ராபின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துணை கேப்டன் ரஹானே வந்தார். அவரும் விராத் கோலியும் ஆடி வந்தனர். அபாரமாக ஆடிய விராத் கோலி அரை சதம் அடித்தார்.

கோலி 64 ரன்...

தொடர்ந்து அடித்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானேவுடன் விஹாரி இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 56 ரன்கள் எடுத்த நிலையில் ரிடையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். விஹாரி 53 ரன்களும் அடுத்து வந்த ரோகித் சர்மா, 40 ரன்களும் ரிஷப் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் முரளி விஜய்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆரோன் ஹார்டி...

ஆஸ்திரேலிய தரப்பில் மித வேகப்பந்துவீச்சாளர் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. டியார்ஸி ஷார்ட்டும் பிரியன்டும் ஆடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து