முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் நிவாரணத்தில் மண்டபம் கடலோர காவல்படையினரின் பணிகள்

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- கஜா புயல் முன்எச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் ராமநாதபரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படையினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.
      கடந்த மாதம் 16-ந் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்த கஜா புயல் பல பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. இந்த கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது முதல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படையினர் பல்வேறு முன்எச்சரிக்கை மற்றும் வழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டனர். முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் மண்டபம் கடலோர காவல் படையினர் கமாண்டன்டன் வெங்கடேசன் உத்தரவின்பேரில் கமாண்டன்ட் சங்கர்ராஜு உள்ளிட்டவர்கள் பல்வேறு பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடலில் இருந்த மீனவர்களை உடனடியாக பாதுகாப்பாக கரைதிரும்ப கப்பல்கள், ஹோவர்கிராப்ட் கப்பல்கள், விமானங்கள் மூலமாக எச்சரிக்கை விட்டு மீட்டனர். கடலோர காவல் படையின் ரேடார் நிலையத்தின் ரேடியோ சர்க்யூட் மூலம் மீனவர்கள் தங்களது படகுகளை கரைக்கு திருப்பி கொண்டுவர வேண்டுகோள் விடப்பட்டது கன்னியாகுமரி மாவட்ட மிளமனக்குடியிலும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேஸ்வரத்திலும், கடலூர் மாவட்டம் முடசலோடையிலும் மற்றும் சென்னை காசிமேட்டிலும்  மீனவ நண்பர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் புயல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    வங்காள விரிகுடவின் சர்வதேச பாதுகாப்பு இனையம் மற்றும் கடல்தந்தி எனப்படும் விஎச்எப் வழியாக எச்சரிக்கை செய்திகள் விடுக்கப்பட்டது. கடலோர காவல் படையின் தொலைதூர துரித நடவடிக்கை நிலையத்தின் அறிவிப்பின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 125 படகுகளும் மற்ற இடத்தில் 263 படகுகளும் கரைக்கு  திரும்பியது. புயல் தாக்கிய உடனே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுனக் எனப்படும் கப்பல் தனது ஹெலிகாப்டருடன்  காரைக்காலிருந்து நிவாரண பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் புறப்பட்டு காரைகாலுக்கு வெளியே நாகபட்டிணம் மற்றும் போர்டோநோவோக்கு இடையில் தொடச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டது. சுமார் ஆயிரத்து 500 மீனவர்களின் படகுகள் வடக்கு மண்டபத்திலிருந்து தெற்கு மண்டபத்திற்கு மாற்றபட்டது. இந்திய கடலோர காவல் படையின் தீவிர முயற்சிகளினால் கடலில் எந்த ஒரு மீனவருக்கும் இழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலோர காவல்படையின் சார்பில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கணேசபுரம், சேதுபாவா சத்திரம், பிள்ளையார் குளக்கரை, எஸ்.ஆர்.பட்டிணம், விலாங்குளம், மல்லிபட்டிணம் உள்ளிட்ட 9 கிராமங்களில் பாதிக்கப்பட்டிருந்த 350 குடும்பத்தினருக்கு 555 கிலோ அரிசி, 100 கிலோ சீனி, 50 கிலோ பருப்பு, மெழுகுவர்த்திகள், பிஸ்கட்பாக்கெட்டுகள், பாய்விரிப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் என வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து