முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர்.இரா.பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்று எய்ட்ஸ் இல்லாத உலகினை உருவாக்கிட உறுதிமொழியேற்றனர்.
டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பாக திருமங்கலம் அரசு மருத்துவமனை கூட்டு மருந்து சிகிச்சை மையத்தின் முன்பாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.இரா.பூமிநாதன் கலந்து கொண்டு தiமையேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு உரையாற்றியதுடன் உறுதிமொழியை வாசித்தார்.அதனை அங்கு திரண்டிருந்த செவிலியர் கண்காணிப்பாளர்கள்,செவிலியர்கள்,அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,மருத்துவமனை ஊழியர்கள்,ஏ.ஆர்.டி,நம்பிக்கை மையம் மற்றும் சுகவாழ்வு மைய ஊழியர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஏ.ஆர்.டி மைய மருத்துவ அதிகாரி டாக்டர்.பி.எம்.செல்வராஜ் மனோகரன் பேசியதாவது: முன்பு எய்ட்ஸ் பாதித்தால் மரணம் நிச்சயம் என்ற நிலை மாறி தமிழக அரசு வழங்கிடும் இலவச கூட்டு மருந்து உதவியுடன் முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளலாம்.தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் தற்போது 80 சதவீதமும்,எய்ட்ஸ் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதமும் குறைந்துள்ளது.திருமங்கலம் ஏ.ஆர்.டி மையத்தில் எய்ட்ஸ் கிருமியின் எண்ணிக்கையை கணக்கீடு செய்திடும் வைரல் லோடு பரிசோதனை செய்திடும் கருவி உள்ளது.ஹெச்ஐவி நோயாளிகள் திருமங்கலம் வந்து கூட்டு மருந்து வாங்கிச் சென்றிடவும்,சிகிச்சை மேற்கொள்ளவும் அரசு பேருந்தில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.அதே போல் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் தமிழகஅரசால் வழங்கப்படுகிறது.எனவே எய்ட்ஸ் நோயினால் பாதிகப்பட்டவர்கள் தமிழக அரசின் கூட்டு மருந்து சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வாழ்நாளை நீட்டித்து மகிழ்வுடன் வாழ்ந்திடலாம் என்று பேசினார்.இந் நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ராம்குமார்,வசந்தலட்சுமி,மாரியம்மாள்,பொற்செல்வி,அமலா மற்றும் செவிலியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து