முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை,-    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார்.  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்று தெரிவிக்கையில்,
        இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த காலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் நலனில் முழு அக்கறை கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வந்தார்கள். குறிப்பாக ஒரு மாற்றுத்திறனாளிக்கு தனது உடம்பில் உள்ள குறை என்னவென்பதை நினைத்துப் பார்க்காத அளவிற்கு திட்டங்களை வழங்கி ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சுயமாக வருமானத்தை பெற்று பயன்பெறும் வகையில் திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் தற்பொழுதும்  அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,  அம்மா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து முழுமையாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கடைக்கோடி பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றுவது மட்டுமின்றி அவர்களுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

        அதனடிப்படையில் தற்பொழுது தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் வகையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் திறமைக்கேற்ப பணி வழங்கிடும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்து
கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது கல்வித்தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தங்களுக்குரிய பணியினை தேர்வு செய்து அதற்குரிய பணியை மேற்கொள்ளும் பொழுது உங்களுடைய ஒவ்வொருவரின் பொருளாதாரமும் முன்னேற்றம் பெறும். அதேபோல் உங்கள் மூலம் உங்கள் குடும்பத்திற்கும் பயன் கிடைக்கும். இதுமட்டுமின்றி மேலும் இந்த முகாமில் வங்கியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் துவங்க விருப்பம் தெரிவித்தால் உங்களுக்கு வங்கிக்கடன் வழங்க தயாராகவுள்ளார்கள். அதையும் நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 150-க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து  கொண்டுள்ளீர்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு வழங்கப்படும் அல்லது சுயதொழில் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்து கொடுக்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வதுடன் இதுபோன்ற நல்ல வாய்ப்புக்களையும் பயன்படுத்தி பயன்பெற்றுக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
      இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து