மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் ரூ.6.50 குறைப்பு

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      வர்த்தகம்
Gas-Cylinder

புது டெல்லி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பு செய்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் எண்ணெய் நிறுவனம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.50. இந்த விலையில் தற்போது ரூ. 6.50 குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ. 942. இந்த விலையில் தற்போது ரூ.133 குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து