முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணுக்காலில் காயம் : அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா பங்கேற்கவில்லை

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரித்வி ஷா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார்.

6-ம் தேதி தொடக்கம்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

பிரித்வி ஷா காயம்...

டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் காயம் அடைந்தார்.

முதல் டெஸ்டில்....

கேட்ச் ஒன்றை பிடிக்க முற்பட்ட போது, கணுக்காலில் காயம் அடைந்து வேதனையில் துடித்தார். இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார். இதனால், வரும் வியாழக்கிழமை அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து