உலக கோப்பை ஹாக்கி - 2-வது வெற்றி கிடைக்குமா? இந்திய - பெல்ஜியம் இன்று மோதல்

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2018      விளையாட்டு
hockey ind-belgium clash 2018 12 01

புவனேஷ்வர் : உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

முதல் ஆட்டத்தில்...

உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை இன்று (2-ம் தேதி) எதிர்கொள்கிறது.

மற்றொரு ஆட்டத்தில்...

இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. பெல்ஜியம் அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் மோதுகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை (‘பி’ பிரிவு) வீழ்த்தியது. இங்கிலாந்து- சீனா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து