முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 508 ரன்களுக்கு ஆல் அவுட்

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

டாக்கா : டாக்காவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் மெஹ்முதுல்லா சதமடிக்க, முதல் இன்னிங்சில் 508 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஷத்மான் 76 ரன்

வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று முன்தினம் டாக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் ஷாகில் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காள தேச அணியின் ஷத்மான் இஸ்லாம், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் ஷத்மான் சிறப்பாக விளையாடி 76 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் சாகிப் அல் ஹசன் 86 ரன்களில் அவுட்டானார்.

508 ரன்களுக்கு...

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மெஹ்முதுல்லா நிதானமாக ஆடினார். அவர் சதமடித்து அசத்தினார்.136 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் லிட்டன் தாஸ் சற்று அதிரடி காட்டி அரை சதமடித்தார். அவர் 54 ரன்னில் வெளியேறினார். இறுதியில், வங்காள தேசம் தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 508 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச், ஜோமல் வாரிகன், தேவேந்திர பிஷு மற்றும் பிராத்வைட் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து