முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018-ம் ஆண்டின் பிரபலமான வார்த்தை: கேம்பிரிட்ஜ் டிக்சனரி வெளியிட்டது

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கேம்பிரிட்ஜ் : 2018-ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்சனரி வெளியிட்டுள்ளது. அந்த வார்த்தையின் பெயர் நோமோபோபியா என்பதாகும்.

இந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸ்ட்ரக்காகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்கா விட்டாலோ வரும் பயம்தான் நோமோபோபியா.

நோ மொபைல் போன் போபியா என்பதன் சுருக்கமே இந்த வார்த்தையின் விரிவாக்கமாம். கேம்பிரிட்ஜ் டிக்சனரி தனது பிளாக் வாசகர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தது. அதன் இறுதியில் பல வார்த்தைகளைப் பரிசீலித்து அதிக ஆதரவைப் பெற்ற நோமோபோபியா என்ற வார்த்தையை இந்த ஆண்டின் வார்த்தையாக கேம்பிரிட்ஜ் தேர்வு செய்துள்ளது.

நோமோபோபியாவுடன் போட்டியில் இருந்த மற்ற 3 வார்த்தைகள் ஜென்டர் கேப், ஈகோசைட் மற்றும் நோ பிளாட்பார்மிங் என்பதாகும். ஈகோசைட் என்பது சுற்றுச்சூழல் அழிவு என்பதைக் குறிக்கும் வார்த்தை. கிட்டத்தட்ட சூசைட் போன்ற அர்த்தம். நோ பிளாட்பார்மிங் என்பது, ஒவரது சிந்தனை அல்லது யோசனையை செயல்படுத்தவோ அல்லது ஏற்கனவோ இடம் கொடுக்காமையை குறிக்கும் வார்த்தையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து