முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச் 1பி விசா கோரும் நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஹெச் 1பி விசா பெறுவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. முக்கியமாக, இனி தங்கள் பணியாளர்களுக்கு ஹெச்1பி விசா கோரும் நிறுவனங்கள், முன்கூட்டியே இணையவழியில் அதற்காகப் பதிவு செய்வது அவசியமாகிறது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு, அங்கு தங்கி பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் ஹெச் 1பி விசாவை அமெரிக்கா வழங்கி வருகிறது. அவ்வாறு ஹெச் 1பி விசா பெற்று பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களே.

அதிபராக பொறுப்பேற்றதிலிருந்தே ஹெச்1பி விசா நடைமுறைகளில் கடும் கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்திருந்தார். இந்த நிலையில், விசாவுக்கான நடைமுறைகளை மீண்டும் மாற்ற டிரம்ப் நிர்வாகம் புதிய முன்மொழிவை வழங்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பணியாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள், அது குறித்தான தகவல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பிடம் முன்கூட்டியே இணையவழியில் பதிவு செய்ய வேண்டும்.

ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 65,000 ஹெச்1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படும் என்று நாடாளுமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதிலும், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்கு இந்த எண்ணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. புதிய முன்மொழிவின்படி, இதிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து