எரிபொருள் மீதான வரி உயர்வை கண்டித்து பிரான்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை - அவசர நிலை அமல்படுத்த அரசு ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      உலகம்
France Struggle 2018 12 02

பாரீஸ் : பிரான்சில் நடந்து வரும் பெரும் கலவரம் காரணமாக, அங்கு அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

பிரான்சில் எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், வாழ்வாதார செலவுகள் உயர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 17-ம் தேதி முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாலைகள் மறிக்கப்பட்டும், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் செல்ல தடை போட்டும் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரின் தடுப்புகளை தகர்த்தெறிந்தனர். தீ வைத்தனர். போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. முகமூடி அணிந்த ஏராளமான இளைஞர்கள் இரும்பு கம்பிகள், கோடாரிகளுடன் சாலைகளில் சென்றனர். ஏராளமான வாகனங்களை தீவைத்து எரிக்கப்பட்டதுடன், கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக 133 பேர் காயமடைந்தனர். 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அவசர நிலையை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து