இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்: ராஜபக்சே

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      உலகம்
rajapaksa 2018 2 11

கொழும்பு, இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, சர்ச்சைக்குரிய வகையில் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பும் இதுபோன்ற அரசியல் குழப்பம் நிலவிய சூழல்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிதாக தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோன்று தற்போதும் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் வகையில் புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மீண்டும் பொதுத்தேர்தல் நடத்துவதன் மூலமாகவே இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியும். இலங்கை அரசியல் சாசனத்தின்படி, இறையாண்மை என்பது மக்களுக்கானதே தவிர, நாடாளுமன்றத்துக்கானதல்ல. விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது என்று அந்த அறிக்கையில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து