முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிருக்கான ஹாக்கிப் போட்டி

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி.-  இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு சார்பாக தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிருக்கான ஹாக்கிப் போட்டிகள் கடந்த 28.11.2018 முதல் 02.12.2018 வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
  இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிலிருந்து மொத்தம் 34 அணிகள் விளையாடின. 
  லீக் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் 02.12.2018-அன்று நடைபெற்றது.  அப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளின் லீக் சுற்று ஆட்டங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மங்களுர் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், கோழிக்கோடு பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றன.
  வெற்றிப் பெற்ற நான்கு அணிகளும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மகளிர் ஹாக்கிப் போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
  இதன் நிறைவு விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன்  தலைமையேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் அர்ஜூனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற சர்வதேச தடகள வீரர் சார்லஸ் பொராமியோ மற்றும் திருச்சியைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் ந.அன்னாவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வாழ்நாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்.உமையாள் ராமனாதன் , செல்வி. தேவி அலமேலு வைரவன் , துணைவேந்தரின் துணைவியார்  .  சாந்தி இராஜேந்திரன் , ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் த.ரா.குருமூர்த்தி , இயற்பியல் துறைத்தலைவர் பேரா.ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
  அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.சுந்தர் அனைவரையும் வரவேற்றார்.  உடற்கல்வி கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சி.வைரவசுந்தரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  உடற்கல்வி இயக்குனர் முனைவர்.செந்தில்குமரன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து