முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடைபெற்ற செஸ் போட்டியில் திருச்சி மாணவருக்கு முதல்பரிசு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - ராஜபாளையம், ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியானது கல்லூரி வளாகத்தில் 29.11.2018 முதல் நான்குநாட்கள் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு நாள் விழாவில் துணை முதல்வர் ராஜகருணாகரன் வரவேற்று பேசினார்.; பி.ஏ.சி.ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெங்கட்ராஜ் மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் சங்க இணைசெயலாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.  இந்நிகழ்ச்சியின் சிறப்புவிருந்தினராக மாவட்ட செஸ் சங்கதலைவர் கோபால்சாமி கலந்துகொண்டு செஸ் போட்டியில் முதல் பரிசு திருச்சியைச் சேர்ந்த குணால் மாணவருக்கு ரூ.70,000 , இரண்டாம் பரிசாக ரூ.50,000 - ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணா மற்றும் மூன்றாம் பரிசாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சையத் அன்வர் ஷாஜீலி ரூ.35,000யும் பெற்றனர். இப்போட்டியின் வாயிலாகரூ.5 லட்சம் பரிசுத்தொகை 98 வீரர்களுக்கும் மற்றும் 84 வீரர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில்; தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் பிறமாநிலங்களை சார்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். முடிவில் கல்லூரியின் துணைபொதுமேலாளர் செல்வராஜ் விளையாட்டுதுறை ஆசிரியர் வீரமணி நன்றி கூறினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து