முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் - ஒழுங்கை காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது துணை ஜனாதிபதி வெங்கையா பாராட்டு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறது. பல துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. நமது வாழ்க்கை முறை மாறிப் போனதே நோய்கள் வருவதற்குக் காரணம். எனவே நாம் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த வாழக்கை முறைக்கு மாற வேண்டும். நமது குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். சரியான உணவு, இந்திய உணவைச் சாப்பிட வேண்டும். மேலை நாட்டு உணவுகளைச் சாப்பிடுவது தற்போது பேஷனாகி விட்டது.

தமிழ்நாடு உணவு வகைகள் சுவையானவை. மோர்க்  குழம்பு, அவியல், சாம்பார், செட்டிநாடு சிக்கன் என பல உணவுகளும் மிகச்சிறந்தவை. ஆனால் நாம் பர்க்ர், பீட்சா என தேடி அலைகிறோம். உங்களுக்கு 25 வயது ஆகிறது என்றால் சிக்கன் 65 சாப்பிடலாம். தமிழகத்தில் விதவிதமான சிக்கன் ஐயிட்டங்கள் எல்லாம் உள்ளதே. அதைவிடுத்து மேலை நாட்டு சமையல் தேவையா? மேற்கத்திய மோகத்தை நாம் கைவிட வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து