முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுகளை அகற்றும் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, கழிவுகளை அகற்றும் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. அதன் தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் போது முறையாக தெரிவிக்கப்பட வேண்டுமென்ற விதியுடன் ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர்.

அதே போல் இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர். ஆகவே, மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது, மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து