தெற்காசியாவில் அமைதி ஏற்பட இந்திய பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      உலகம்
jim-mattis 2018 12 04

வாஷிங்டன் : தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் - தலிபான்களுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அமைதி ஏற்பட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் 40 வருடங்களாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கான பாதையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக சிறந்தவற்றை செய்வோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து