எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பாரீசில் போராட்டம் நடத்திய 400 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      உலகம்
paris protest 2018 12 04

பாரீஸ் : எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் போராட்டம் நடத்திய 400 பேரை போலீசார் கைது செய்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி அண்மையில் பிரான்சில் உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்தன. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பாரீசில் நடந்த போராட்டத்தில் கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் வன்முறை கும்பல் துணிக் கடைகளில் கொள்ளை, ஆடம்பர வீடுகள் மற்றும் உணவகங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தலில் ஈடுபட்டது. கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. போராட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வரிகளை குறைப்பது, விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 249 இடங்களில் தீவைத்து, அரசு மற்றும் தனி நபர்களின் சொத்துகளை சேதப்படுத்தியதாக 400 பேரை போலீசார் கைது செய்தனர். வன்முறையை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் எட்வர்ட் பிலிப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து