முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு காரணம் இயற்கையல்ல: ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கடந்த 25 ஆண்டுகளாக உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல்பாடுகளினால் மாற்றமடைந்த பருவநிலைகளே என்று புதிய ஆய்வு ஒன்று ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நேஷனல் அகாதெமி ஆப் சயன்ஸஸ் என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமடைதலுக்குக் காரணமான மனித உற்பத்தி, மற்றும் பல சீரழிவு நடவடிக்கைகளினால் கடல் நீர்மட்டம் சராசரியாக உயரும் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து வருகிறது, இந்த நிலை தொடரவே செய்யும் என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல் ஆய்வு தேசிய மையத்தின்  ஜான் பாஸுல்லோ கூறும் போது,

பிராந்திய கடல் நீர் மட்ட அதிகரிப்பின் வகை மாதிரிகளில் பருவநிலை மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது என்று தெரியும் அதே சமயத்தில் இது எதிர்கால பருவநிலை மாற்றத்தையும் பெரிய அளவில் தூண்டி விடும் என்றே கூற முடியும். இந்த நூற்றாண்டின் சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் மேலும் 2 -3 அடி கூடுதலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிராந்தியவாரியாக இதில் ஏற்படும் மாற்றங்கள் கடற்கரை பகுதி மக்களுக்கு மிக முக்கியமனது. அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

உதாரணமாக அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம் ஆண்டு சராசரியக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியாவில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதைக் காண முடிகிறது.

இந்த ஆய்வின் படி சில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. சராசரியைக் காட்டிலும் அதிகமாகும் கடல் நீர்மட்டம் என்பது மனித காரணங்களினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களினாலேயே என்றும் இயற்கையாக மாறும் கடல்சார் சூழல்களினால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் வானிலை மாற்றத்தினால் ஏற்படும் பிராந்திய கடல்நீர்மட்ட உயர்வு சில சமயங்களில் இயற்கை சுழற்சியினால் ஏற்படும் தாக்கங்களைப் போல் செய்தல் போன்று இருக்கும். எனவே இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து