3 விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் அனுப்பியது ரஷ்யா

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      உலகம்
russia rocket 2018 12 04

மாஸ்கோ : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விண்வெளி ஆய்வு மையத்துக்கு 2 வீரர்களை அனுப்புவதற்கு கடந்த அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில், பெரும் பரபரப்புக்கிடையே தற்போது அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த அன்னி மெக்லெய்ன், கனடா விண்வெளி ஆய்வு மையத்தின் டேவிட் செயின்ட்-ஜாக்வெஸ், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஓலெக் கொனோனென்கோ ஆகிய மூவரையும் ஏற்றிக் கொண்டு, ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்.11 ரக ராக்கெட் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது.

கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5 மணி) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து