பார்லி. தேர்தலுடன் 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் - தேர்தல் ஆணையம் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
election commission 2018 11 26

புது டெல்லி : 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபாவிற்கு 2019-ம் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் 2019 மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது. இம்மாநிலங்களும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே லோக்சபா தேர்தலுடன் 4 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி கூறியதாவது:-

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைக்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். அப்போது காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து