நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
Babri Masjid 2018 12 04

லக்னோ : நாளை 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

26-வது ஆண்டு...

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சிவசேனா மற்றும் விசுவ இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்காக சமீபத்தில் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நடத்தப்பட்டது.

மீண்டும் பதற்றம்...

அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய துணை நிலை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் மட்டுமின்றி பைசலாபாத் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து