முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு உதவினால் தேச நலனை பாதிக்கும் - பார்லி. துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர் : மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவினால் அது தேசத்தின் நலனை பாதிக்கும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து தான்தோன்றிமலையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் பாதிக்கும்....

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே மேகதாதுவில் அணை கட்டுவதா? இல்லை ஒகேனக்கல்லில் அணை கட்டுவதா? என்ற பிரச்சனை இருந்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாதிக்கும். அதே நேரம் மின் உற்பத்திக்காகத்தான் மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று கர்நாடகா கூறினால் அதற்கு சிறந்த இடம் ஒகேனக்கல்தான். அவர்கள் அங்கு மின் உற்பத்தி செய்து கொள்ளலாம்.

தேசத்தின் நலனை...

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவினால் அது தேசத்தின் நலனை பாதிக்கும். தமிழக மக்கள் என்றும் அதனை ஏற்று கொள்ள மாட்டார்கள். மத்திய அரசு தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து