புலந்த்சாகர் வன்முறைக்கு பா.ஜ.க.வின் பொறுப்பற்ற கொள்கைகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
Mayawati 05-11- 2018

லக்னோ : உத்தரப்பிரதேச அரசின் பொறுப்பற்ற, தவறான கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.

2 பேர் பலி...

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஒரு கும்பல் திடீர் போராட்டம் நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

கடும் நடவடிக்கை

இந்த வன்முறைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் தவறான கொள்கைகளால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் இறந்ததாகவும் அவர் கூறினார். அத்துடன், இங்கு ஒரு அரசாங்கம் உள்ளது என மக்கள் உணரும் வகையில், வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார். வன்முறையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாயாவதி, கும்பலாக சேர்ந்து தாக்குவதை தடுக்க சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து