கோலியிடம் பயப்பட தேவையில்லை: ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு ரிக்கி பாண்டிங் அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      விளையாட்டு
Ricky-Ponting 2018 12 04

சிட்னி : ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார்.

அச்சத்தை ஏற்படுத்தி...

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:-

இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தை பார்த்து அசராமல் அவருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.கோலி ரன் வேட்டையில் ஈடுபடுவார் என நினைக்க தேவையில்லை. அவர் ரன்களை குவிக்க முயல்வார். ஆனால் அவரை கண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பயப்பட தேவையில்லை. அவருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். மிச்சேல் ஜான்சன் சில முறை கோலிக்கு ஆக்ரோ‌ஷமான பந்துவீச்ச, உடல் செய்கை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.

நல்ல தொடக்கம்...

உள்ளூரில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பாடு வலிமையாக இருக்க வேண்டும். தற்போதைய அணி ஆக்ரோ‌ஷமான மனபான்மையுடன் ஆடாவிட்டால் அது குப்பைக்கு ஈடாகும். வார்த்தைகள், செயல்கள் ஒன்றாக அமைய வேண்டும். 2014-15 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. கோலி 86.26 சராசரியுடன் 692 ரன்களை குவித்தார். நான் அணியின் கேப்டனாக இருந்தால் கோலிக்கு நல்ல தொடக்கம் அமையவிட மாட்டேன். ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் கோலியை அதிகமுறை சிரமத்துக்கு உள்ளாக்கினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து