பிரதமராக செயல்பட தடை விதிப்பு: மேல்முறையீடு செய்தார் ராஜபக்சே

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      உலகம்
Rajapaksa 2018 12 05

கொழும்பு : இலங்கையில் ராஜபக்சே பிரதமராக செயல்பட விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா நாட்டின் புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்தார்.

இதனிடையே அதிபர் சிறிசேனா கொழும்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது, இலங்கை பிரதமராக ரணிலை மீண்டும் நியமிக்க மாட்டேன். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து