இந்தியாவின் நீளமான ரயில் - சாலை பாலம் வரும் 25-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
rail - road bridge 2018 12 05

புது டெல்லி : இந்தியாவின் நீளமான ரயில் - சாலை பாலமான போகிபீல் பாலத்தை, பிரதாமர் மோடி டிசம்பர் 25-ம் தேதி திறந்து வைக்கிறார். இப்பாலம் பிரம்மபுத்திரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கிறது.

4.94 கி.மீ. நீளம் கொண்ட போகிபீல் பாலம், அசாமின் கிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச் சாலையும் கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. 1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்ட போகிபீல் பாலம், 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து