நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் செயலருக்கு மூன்று வருட சிறை

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
coal scam case former secretary 2018 12 05

புது டெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கை, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பரஷார் விசாரித்தார். விசாரணை முடிவில், முன்னாள் நிலக்கரி துறை செயலர் எச்.சி.குப்தா உட்பட ஆறு பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்திருந்தார். இவர்களில், தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் விகாஸ் பத்னியும் அடக்கம்.

இந்நிலையில், இந்த வழக்கில், நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, அதிகாரிகள் எஸ் குரோபா, கேசி சம்ரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மேலும் விகாஸ் பத்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பரஷார் தீர்ப்பு வழங்கினார். விகாஸ் மெடல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து