முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பெண்கள் விடுதி அறைகளில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்தவர் கைது

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி கண்காணித்த உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஹைடெக் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள விடுதி ஆடம்பரமாக இருந்ததால் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் விரும்பி அதிக அளவில் தங்கியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (44) என்பவர் இந்த விடுதியை நடத்தி வருகிறார். தாம்பரத்தில் வசித்து வரும் சஞ்சீவ் பார்ப்பதற்கு கண்ணியமான தோற்றத்துடன் உள்ளவர். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் சரளமாகப் பேசுவார்.

பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலேயே இந்த விடுதி செயல்பட்டதால் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். சமீபத்தில் தங்கள் குளியலறையில் சுவிட்ச் வேலை செய்யவில்லை, விளக்கு எரியவில்லை என பெண்கள் விடுதி வார்டன்களிடம் தெரிவித்த போது உரிமையாளர் சஞ்சீவ் நேரடியாக வந்து தானே முன்னின்று அனைத்தையும் சரிசெய்து கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் குளியலறை படுக்கை அறையில் சில வித்தியாசத்தை உணர்ந்த பெண்கள், மென்பொறியாளர்கள் என்பதால் உடனடியாக ஹிட்டன் கேமரா டிடக்டர் செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து சோதித்து பார்த்துள்ளனர்.

அப்போது குளியலறை, படுக்கை அறையில் சுவிட்ச் போர்டு, விளக்குகள், சீலிங் பகுதி என பல இடங்களில் ரகசிய எச்.டி. கேமராக்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த மிகச்சிறிய ரகசிய கேமராக்களைக் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்த சஞ்சீவை வரவழைத்த போலீஸார் விடுதிப் பெண்கள் அளித்த புகாரில் அவரைக் கைது செய்துள்ளனர்.

தங்கும் விடுதியில் இவ்வாறு ரகசிய கேமரா இருந்ததால் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். விடுதியைப் பூட்டுபோட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். கைதான சஞ்சீவிடமிருந்து 16 செல்போன்கள், லேப்டாப் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட ரகசிய கேமராக்கள் எச்.டி. தொழில் நுட்பத்தில் அதிக எம்.பி. உள்ள கேமராக்கள். விலை உயர்ந்த அந்தக் கேமராவில் பதிவாகும் வீடியோக்கள் மிகத் தெளிவாக தெரியும் என்கின்றனர் போலீசார். இந்த வழக்கு விரைவில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவுக்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து