ஹிட்லர் போல் செயல்படும் சிறிசேனா: ரணில் சாடல்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      உலகம்
Ranil Wickramasinghe 05-11-2018

கொழும்பு : இலங்கை அதிபர் சிறீசேனா ஹிட்லர் போல் செயல்படுவதாக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே சாடினார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:

இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ளதை நினைத்து நாங்கள் கவலை கொள்ளவில்லை. தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகிறோம். சர்வாதிகாரி ஹிட்லரைப் போல் பொது வாக்கெடுப்பு நடத்த சிறீசேனா முயற்சி செய்யக் கூடாது. அதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை இரண்டு விஷயங்களை மட்டுமே நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்.

முதலாவது, இலங்கையில் சட்டப்பூர்வ அரசு அமைய வேண்டும். அதை எனது ஐக்கிய தேசிய கட்சி செய்துவிடும். இரண்டாவதாக, தேர்தல் நடைபெறும் தேதியில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைய வேண்டும். அனைத்துத் தரப்பினரும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினால், ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்க்காது என்றார் ரணில் விக்ரமசிங்கே.

இலங்கையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபட்சவை பிரதமராக சிறீசேனா நியமித்தார். எனினும், ராஜபட்ச பிரதமராக தனது பணிகளை செய்வதற்கு இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து