முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதியை கைப்பாவையாக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உச்சநீதிமன்ற நீதிபதியை பிரதமர் நரேந்திர மோடி தனது கைப்பாவையாக்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்துக்கு வெளியில் இருந்து வந்த நெருக்கடிக்கு மத்தியில் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணியாற்றினார் என்று அண்மையில் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

ஆட்சி அதிகார ஆணவம், வாய்மையில் தலையிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் நீதிபதிகளுக்கு நாட்டில் என்றும் குறைவில்லை. அத்தகைய நீதிபதிகளைப் பெற்றதற்கு நாடு பெருமை கொள்கிறது. இதை மோடி புரிந்துகொள்ளாமல் தனது அதிகாரத்தை நீதித்துறையின் மீது செலுத்த முயற்சித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியை அவர் கைப்பாவையாக்கிவிட்டார் என்றார்.

இது குறித்து, காங்கிரஸ் நிர்வாகி கபில் சிபல் கூறுகையில், வெளியில் இருந்து நெருக்கடி அளித்தவர் யார்? என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். அவருக்குத் தெரியவில்லை எனில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

குரியன் ஜோசப் கூறியிருந்த கருத்துக்கு, தீபக் மிஸ்ராவோ, மத்திய அரசோ எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் 29-ஆம் தேதி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான குரியன் ஜோசப், தீபக் மிஸ்ராவுக்கு எதிராகக் கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் ஒருவர் ஆவார். இவருடன் நீதிபதிகள் செலமேஸ்வர்(ஓய்வு), ரஞ்சன் கோகோய் (தற்போதைய தலைமை நீதிபதி), மதன் பி.லோகுர் ஆகியோரும் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து