ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினம்: ஜனாதிபதி ராம்நாத் மரியாதை

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      இந்தியா
ramnath respect r venkatraman 2018 12 05

புதுடெல்லி :   முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் பிறந்த நாளை ஒட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது உருவப் படத்திற்கு மலர் மரியாதை செய்தார்.

நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக கடந்த 1987, ஜூலை முதல் 1992, ஜூலை 25-ஆம் தேதி வரை பதவி வகித்தவர் ஆர். வெங்கட்ராமன். அவரது இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். அவர் ஆர்.வி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். 1910, டிசம்பர் 4-ஆம் தேதி தஞ்சை மாவட்டம், ராஜாமடத்தில் பிறந்த அவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்தியஅமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் கடந்த 2009, ஜனவரி 27-ஆம் தேதி காலமானார்.

அவரது பிறந்த தினத்தை ஒட்டி, ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் ஆர்.வெங்கட்ராமனின் திருவுருவப் படத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.வெங்கட்ராமனின் குடும்ப உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலக அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து