பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
school open 2018 5 30

சென்னை : மழையால் வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

சுற்றறிக்கை...

பொதுவாக மழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவில்...

அதில், மழை பெய்தால் இனி உடனே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளித்தால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும். மழையை பொருத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் விடுமுறை அளிக்க வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.

திருவிழா போன்றவற்றிற்கு ஊள்ளூர் விடுமுறை விடும்போது அதனை ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து