அடிலெய்டு முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அறிவிப்பு

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      விளையாட்டு
ind-aus test start 2018 12 05

அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ளது. இந்திய அணி 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி...

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள்  மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவனையே அறிவித்துவிட்டது.  இந்திய அணியில்,  ரோகித் சர்மாவா, ஹனுமா விஹாரியா யார் ஆடப்போகிறார்கள் என்பது இன்று தெரியும்.

12 வீரர்கள் பட்டியல்

“உள்நாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் பலவீனம் என்று கூறமுடியாது.  எந்த ஒரு அணியைப் பற்றியும் முன் கூட்டிய அபிப்ராயத்தை உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  என்ன நடந்தாலும் திறமை இருக்கிறது. நாம் என்ன பேசினாலும் செய்தாலும் கடைசியில் திறமைதான் முக்கியம்” என்று கூறிய இந்திய கேப்டன் விராட் கோலி 12 வீரர்கள் பெயரை வெளியிட்டார்.

இந்திய அணி:

முரளி விஜய், லேகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி,  ரகானே, ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவ்ஜா, ஷான் மார்ஷ்,  பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப்,  ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க்,  பாட் கமின்ஸ், நேதன் லயன்,  ஜோஷ் ஹேசல்வுட்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து