வெளியான ஒரே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்தது 2.0 !

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      சினிமா
2 0 movie box office 2018 12 06

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்துள்ளது என்று அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

பெரிய எதிர்பார்ப்புகளோடு கடந்த 29-ம் தேதி வெளியானது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர்.

ரூ. 500 கோடி வசூல்

இந்த படம் இந்திய மதிப்பில் ரூ. 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டது. இந்திய அளவில் மட்டும் ‘2.0’ முதல் நாள் 100 கோடி வசூல் செய்யலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் 2.0 திரைப்படம் உலக அளவில் நான்கு நாளில் 400 கோடி வசூல் செய்தது. இப்போது ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா தெரிவித்துள்ளது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து