ஓரினச் சேர்க்கை விவகாரம்: பிரிட்டனில் மனைவியை கொன்ற இந்தியருக்கு ஆயுள் தண்டனை

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      உலகம்
Indiaorigin man sentenced 2018 12 06

லண்டன் : ஓரினச் சேர்க்கையாளருடனான காதல் கண்ணை மறைக்க இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்றுவிட்டு உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட இந்தியருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

பிரிட்டன் நாட்டில் உள்ள மான்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஜெசிக்கா, தன்னுடன் படித்த மித்தேஷ் பட்டேல் என்ற இந்திய வம்சாவளி மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள நார்த் யார்க் ஷைர் பகுதிக்குட்பட்ட மிடில்ஸ்பரோ நகரில் ராயல் சாலையில் ஜெசிக்கா - மித்தேஷ் பட்டேல் தம்பதியர் ஒரு மருந்துகடை நடத்தி, வாழ்ந்து வந்தனர்.

மூச்சுத்திணற ...

இந்நிலையில், இங்குள்ள லிந்தோர்ப்பே புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் ஜெசிக்கா(34) பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடித் தோற்ற நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கதிகமான இன்சுலின் ஊசி மருந்தை ஜெசிக்காவின் உடலில் செலுத்தி மயங்கவைத்த பின்னர், முகத்தை பிளாஸ்டிக் கவரால் பொத்தி, மூச்சுத்திணற வைத்து அவரை கொன்றுவிட்ட விபரம் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

ஓரினச் சேர்க்கை...

இதைத்தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின்பேரில் மித்தேஷ் பட்டேலை கைது செய்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. இளம் வயதில் இருந்தே ஆண்களுடனான ஓரினச் சேர்க்கையில் அதிகமான பிரியம் கொண்டிருந்த மித்தேஷ், திருமணத்துக்கு பின்னரும் இதை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் தான் கொலை செய்ததாக தெரிவித்தார்.

ஆயுல் தண்டனை...

இதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் மித்தேஷ் பட்டேல்(37) மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை டீஸ்சைட் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மித்தேஷ் பட்டேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து  நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனை காலத்தில் 30 ஆண்டுகள்வரை அவரை பரோலில் விடுவிக்க  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து