ஒரேகட்டமாக நடக்கிறது: ராஜஸ்தான், தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      இந்தியா
Rajasthan Young Voters 2018 12 06

புதுடெல்லி : ராஜஸ்தான் (200 தொகுதிகள்) மற்றும் தெலுங்கானா (119 தொகுதிகள்) ஆகிய 2 மாநிலங்களில் இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

டி.ஆர்.எஸ். தீர்மானம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட்காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தீர்மானித்தது.

தேர்தல் அறிவிப்பு...

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த முடிவை மேற்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் தெலுங்கானா சட்டசபைக் கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடக்கும் தேதிகளை வெளியிட்டது.

சத்தீஷ்கர் - மிசோரம்...

இதைத்தொடர்ந்து 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் ஆகியவற்றில் கடந்த 28-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

பலத்த பாதுகாப்பு...

இந்தநிலையில், ராஜஸ்தான்(200 தொகுதிகள்), தெலுங்கானா(119) ஆகியவற்றில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக  ராஜஸ்தானில் பிரதமர் மோடியும், தெலங்கானாவில் ராகுல் காந்தியும் கடைசிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.தேர்தலையொட்டி 2 மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் பணி முழு வீச்சில் தொடங்குகிறது.

ஓட்டு எண்ணிக்கை...

ஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.  அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து