முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு தூக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றம்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொலைக் குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

டேவிட் ஏர்ல் மில்லர் என்ற அந்த நபருக்கு டென்னஸீ மாகாணத் தலைநகர் நாஷ்வில் சிறையில் மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு 36 ஆண்டுகள் கழித்து அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு நீண்ட காலம் கழித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதால் மக்களின் வரிப் பணம் வீணாவதோடு, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ஆகிய இரு தரப்பினருக்குமே அது கொடுமையான மன உளைச்சலை தரும் என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவில் மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து