சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      ஆன்மிகம்
Sabarimala1 2018 10 19

திருவனந்தபுரம் : சபரிமலையில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில் பக்தர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைந்தது. வெளி மாநில பக்தர்களும் சபரிமலை செல்ல துவங்கினர். சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. பக்தர்களுக்கு போலீசார் இடையூறு செய்யக் கூடாது. அவர்கள் சரண கோஷம் எழுப்பவும் தடை விதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தனர். ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகள் குறைந்தன. போராட்டக்காரர்களும் சபரிமலையில் நடந்த போராட்டங்களை நிறுத்தி கொண்டனர். இதனால் சபரிமலையில் அமைதி திரும்பியது.

இதற்கிடையே ஆய்வுக்கு சென்ற ஐகோர்ட் குழுவும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தி தருவதாக தெரிவித்தனர். போராட்டங்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் ஐகோர்ட் குழுவின் திருப்திகர போட்டிகளும் ஐயப்ப பக்தர்களுக்கு நிம்மதியை கொடுத்தது. இதையடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் அதிகரிக்க தொடங்கியது. தொடக்க நாளில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்ற நிலையில் கடந்த வாரம் 70 ஆயிரம் வரை பக்தர்கள் செல்ல தொடங்கினர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்றும்  பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து