முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் தெருக்கள் ஊர்களின் பெயர்கள் இரண்டு வாரங்களில் தமிழ்ப்பெயர்களாக மாற்றப்படும் என்று தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விரைவில் அரசாரணை

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் சாலைகள், தெருக்கள், ஊர்களில் பெயர்கள் ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இவை பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனை மாற்றி தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இதற்கான அரசாரணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

3 ஆயிரம் பெயர்கள்...

சென்னையில் நடைபெற்ற வானவில் பண்பாட்டுக்கழகத்தின் விழாவொன்றில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிறமொழிப் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கான முயற்சியை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் மேற்கொண்டுள்ளார். இன்னும் இரு வாரங்களில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். 3 ஆயிரம் பெயர்களுக்கு மேல் அரசு சேகரித்துள்ளது. ஆட்சியர் அளவில் இதற்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி தமிழ்ப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ட்ரிப்ளிகேன் என்பது திருவல்லிக்கேணியாக மாறும். டூட்டுகுரின் தூத்துக்குடியாக மாறும். இதுபோன்று 3 ஆயிரம் பெயர்கள் உருமாற்றம் அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து