முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி மோசடியாளர்கள் வெளிநாட்டுக்கு ஓடுவதன் மூலம் தப்பிக்க முடியாது - பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நிதி மோசடியாளர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதன் மூலம் அரசின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கமுடியாது என்பதை நிரூபித்துவிட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மறைமுகமாக...

ஊடக நிறுவனம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை ஆண்ட பிரபலமான குடும்பத்தால் ஆக்கபூர்வமாக எதையும் செய்யமுடியவில்லை என, நேரு குடும்பத்தை மறைமுகமாக சாடினார். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற மோடி, மக்கள் சார்ந்த முடிவுகளை அரசு துணிவுடன் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தப்பவிடக்கூடாது...

இந்தியாவில் கோடிக்கணக்கில் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்ற நிலை முன்பு இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர் தற்போது, அவர்களை பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்துவோம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். நிதி மோசடியாளர்களை தப்பவிடக்கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருப்பதாகவும் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து