தங்கம் விலை உயர்வு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      வர்த்தகம்
Gold price 2018 12 08

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.360 அதிகரித்தது. நேற்று ஒருசவரன் ரூ.24 ஆயிரத்து 80 ஆக விற்பனையானது.

ரூ.24 ஆயிரத்தை...

கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி தங்கம் விலை சவரன் ரூ.23 ஆயிரத்து 216 ஆக இருந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.23 ஆயிரத்து 720 ஆக இருந்தது. நேற்று சவரனுக்கு அதிரடியாக ரூ.360 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.24 ஆயிரத்து 80 ஆக உள்ளது. இதன்மூலம் சவரன் மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.3,010-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து